மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாணவி ஸ்ரீமதி எழுதிய கடிதம்.! அது எங்க பொண்ணோட கையெழுத்தே இல்லை.! மாணவியின் பெற்றோர் சொன்ன அதிர்ச்சி தகவல்.!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூரில் இருக்கும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பள்ளியை சுற்றிய பகுதிகளில் நேற்று முன்தினம் பெரும் கலவரம் வெடித்தது.
இதில் அந்த பள்ளியின் அனைத்து வகுப்பறைகளும் அடித்து நொறுக்கப்பட்டதோடு பள்ளிக்கு சொந்தமான வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. அங்கு பெரும் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாணவியின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், இறப்பிற்கு பள்ளி நிர்வாகமே காரணம் என்றும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் மாணவி எழுதிய கடிதம் ஒன்று வெளியாகி உள்ளது.
அந்த கடிதத்தில் தான் நன்றாக படிப்பதாகவும் ஆனால் கணிதம், வேதியியல் ஆசிரியைகள் தன்னை துன்புறுத்தியதாகவும் மாணவி கடிதத்தில் தெரிவித்துள்ளார். தான் சரியாக படிப்பதில்லை என டார்ச்சர் செய்ததாகவும், தன்னை பற்றி மற்றவர்களிடம் தவறாக பேசியதாகவும் மாணவி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில் அம்மா, அப்பா, சந்தோஷ், துர்கா உள்ளிட்ட சில பெயர்களை எழுதி என்னை மன்னித்துவிடுங்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், மாணவி ஸ்ரீமதி எழுதியதாக கூறப்படும் கடிதம் தனது மகளின் கையெழுத்து இது இல்லை என ஸ்ரீமதியின் பெற்றோர்கள் மறுத்துள்ளனர்.