மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பேராசிரியருடன் லிவிங் டுகெதர்.. கல்யாணம் முடிந்தும் தொல்லை.. மாணவி, ஆண் நண்பருடன் செய்த பரபரப்பு சம்பவம்.!
லிவிங் டுகெதர் வாழ்க்கைக்கு பின்னர் வேறொருவருடன் திருமணம் முடிந்தும் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர், கல்லூரி மாணவி மற்றும் ஆண் நண்பரால் படுகொலை செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள கேளம்பாக்கம் அருகே செயல்பட்டு வரும் கல்லூரியில், மாணவி ஒருவர் பி.எச்.டி ஆராய்ச்சி படிப்பு பயின்று வருகிறார். இதற்கு முன்னதாக மாணவி எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்று வந்த சமயத்தில், கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த செந்தில் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், அவ்வப்போது தனிமையிலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், செந்திலுக்கு வேறொரு பெண்மணியுடன் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், திருமணத்திற்கு பின்னரும் செந்தில் மாணவியுடனான பழக்கத்தை கைவிடாமல் இருந்துள்ளார்.
மேலும், நான் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறி அவ்வப்போது பாலியல் ரீதியாக துன்புறுத்தவும் தொடங்கியுள்ளார். இதற்குள்ளாக வேறொரு கல்லூரியில் பயில தொடங்கிய மாணவிக்கு அருண் பாண்டியன் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. மாணவி விரிவுரையாளர் செந்தில் பாலியல் தொல்லை குறித்து கூறி இருக்கிறார்.
இதனையடுத்து, அவரை கொலை செய்ய பெண்மணியும், அருண் பாண்டியனும் முடிவெடுத்த நிலையில், நேற்று செந்திலை மகாபலிபுரம் அருகே மாணவி வரச்சொல்லியுள்ளார். அங்கு வந்த செந்திலை அருண் பாண்டியன் மற்றும் மாணவி கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். கழுத்து மற்றும் மார்பில் கத்திக்குத்து பாய்ந்து செந்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள், தப்பி செல்ல முயன்ற இருவரையும் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். தற்போது அருண் பாண்டியன் மற்றும் கல்லூரி மாணவியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.