"தாய்க்காக 5,000 ரூபாய் பணத்தை சேமித்து வைத்துள்ளேன்" - சட்டக்கல்லூரி மாணவர் கடிதம் எழுதிவைத்து தற்கொலை..! உருக்கமான கடிதத்தால் உடைந்துபோன தாய்..! 



student-write-a-letter-for-his-mother-and-conduct-suici

சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் சல்மான் (வயது 19). இவர் சென்னையில் உள்ள தரமணியில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.

இந்த நிலையில் கல்லூரியின் அருகே தனியார் விடுதியில் தங்கி படித்த மாணவர், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தனது சொந்த ஊருக்கு சென்று மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். 

அப்போது விடுதியில் தான் தங்கியிருந்த அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். சல்மானுடன் விடுதியில் வசிக்கும் சக நண்பர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது சல்மான் தூக்கிட்டதை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தனர். 

பின் இதுகுறித்து அருகிலுள்ள தரமணி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சல்மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

Thirunelveli

சல்மானின் அறையை சோதனை செய்தபோது, அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். 

கடிதத்தில் "மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பதை தான் தெரிந்துகொள்ள ஆசைப்படுவதாகவும், தான் தனது தாய்க்காக 5,000 ரூபாய் பணத்தை சேமித்து வைத்துள்ளேன்" எனவும் தாய் பாசத்தை வெளிக்காட்டும் வகையில் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதிவைத்தது தெரியவந்தது.

தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் பல கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சட்டக் கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.