தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இது ஒன்றால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு மேலும் 130 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டமாக நாமக்கல் திகழ்கிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதேபோல் கொரோனாவை தடுப்பதில் முன்னணி மாவட்டமாக நாமக்கல் திகழ்கிறது என தெரிவித்தார்.
தமிழகத்தில் 68 ஆயிரம் பரிசோதனை செய்தால் 6 ஆயிரம் பேருக்கு மட்டுமே கொரோனா இருப்பது கண்டறியப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் உள்ளது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவருக்கு மனநிறைவு அளிக்கும்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு அறிவுறுத்தியுள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். எனவே மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.