ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
கொரோனா உயிரிழப்புகளை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.! முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல், மதுரை மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஆய்வு செய்வதற்காக 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தநிலையில், இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அங்கு அவர் பேசுகையில், தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க முன்வருபவர்களுக்கு சலுகை வழங்கப்படும். மதுரையில் திருமங்கலம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கவுள்ளன.
மேலும், கொரோனா நோய் பரவலைத் தடுக்கவே இ-பாஸ் நடைமுறை தேவையாக இருக்கிறது. அதன் மூலம் தேவையின்றி வெளியூர் செல்வதைத் தடுக்கவே இந்த நடைமுறை அவசியமாக இருக்கிறது. தமிழகத்தில் கூடுதலாக இ-பாஸ் வழங்க குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. எதிர்காலத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாகவே இருக்கும் என கூறினார்.
கொரோனா உயிரிழப்புகளை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. இதுபற்றிய எதிர்க்கட்சிகள் புகாரில் எந்த அடிப்படையும் இல்லை. மாவட்ட வாரியாக விவரங்களை வெளியிட்டுக்கொண்டே வருகிறோம் என்று தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.