எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் வாரிசு இவர்கள்தான்.! முதல்வர் பழனிசாமி பேச்சு.!



tamilnadu cm talk about MGR and jeyalalitha's Heir

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி வாணியம்பாடியில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்கை  தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். இந்த மினி கிளினிக்கால் கருவேப்பிலாங்காடு, மூக்குத்தி பாளையம், ஏர்வாடி உள்ளிட்ட கிராம மக்கள் பயனடைவார்கள். 

அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஏழை-எளிய மக்கள் பயன் பெறுவதற்காகவே அம்மா மினி கிளினிக் திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் 100 இடங்களில் அம்மா மினி கிளினிக் அமைக்கப்பட உள்ளது.  கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மாவட்டந்தோறும் நெரில் சென்று ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறேன்.

MGR

எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இயக்கம் அதிமுக. அவர்கள் வழியில் அமைந்த இந்த அரசு அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா இருவருக்கும் வாரிசு கிடையாது. இரண்டு பேருக்கும் மக்கள் தான் வாரிசுகள்.

வீரபாண்டி பிரிவில் ரூபாய் 45 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். கொரோனா தடுப்பு பணிக்காக மாவட்டம், மாவட்டமாக சென்று நேரடியாக ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறேன். மக்கள் சந்திப்பது பெரிதா.? அல்லது வீட்டிலேயே உட்கார்ந்து பேசுவது பெரிதா? வீடியோ கான்பரன்சிங் மூலம்  பேசி வரும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அரசை விமர்சித்து வருகிறார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.