மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகமே அதிர்ச்சி: 3 வயது சிறுமியிடம் அத்துமீறிய தாத்தா.. பெற்றோரிடம் சைகை மொழியில்., பதறித்துடித்த பெற்றோர்.. கோவையில் பயங்கரம்.!
தாத்தா முறைகொண்டவர் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெருங்கொடுமை நடந்துள்ளது.
கோயம்புத்தூரை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா (வயது 38). இவர் கூலித்தொழிலாளி ஆவார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் மகன் உள்ளனர். இவரின் பக்கத்து வீட்டில் 3 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். ராஜேஷ் சிறுமிக்கு தாத்தா முறை கொண்டவர் ஆவார் (இரு குடும்பத்தாரும் உறவினர்கள்). இதனால் அவ்வப்போது சிறுமி தாத்தாவின் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமி ராஜேஷ் கண்ணாவின் வீட்டிற்கு செல்ல, வீட்டில் இருந்த ராஜேஷ் சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். அதனைத்தொடர்ந்து சிறுமி வீட்டிற்கு செல்லவே, பெற்றோரிடம் கை, கால் வலிப்பதாக தெரிவித்து அழுதுள்ளார்.
சிறுமியின் பெற்றோர் என்ன நடந்தது என விசாரிக்க, சிறுமி தனக்கு ராஜேஷ் செய்ததை சைகை மொழியில் செய்து காண்பித்தவாறு அழுதுள்ளார். இதனை அறிந்து அதிர்ந்துபோன பெற்றோர், துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.