மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெயிலை சமாளிக்க முடியாத தமிழ்நாடும், கடும் மழையை எதிர்கொள்ளும் அபுதாபியும்..!
இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கோடைகாலத்தில் வெப்பம் சார்ந்த பிரச்சனை தற்போது கடுமையான விளைவை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர் வெயில் பிரச்சனைகள், உடல்நலக்கோளாறுகள், குறிப்பிட்ட பொருட்களின் விலை உயர்வு என மக்கள் அவதிப்படுகின்றனர்.
பகல் வேளைகளில் கொளுத்தும் வெயிலில் தலைகாட்ட இயலாமலும், ஒருசில இடங்களில் வேறு வழியின்றியும் தங்களின் பணிகளை கவனித்து வருகின்றனர். இந்த வெப்ப அலை இந்தியாவை மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாக பல ஆசிய நாடுகளையும் பாதித்துள்ளது. பல நாடுகளில் இயல்பு வெப்பநிலை 40 டிகிரியை கடந்துள்ளது. தமிழ்நாட்டிலும் அதே நிலை தான்.
இந்நிலையில், சவூதி அரேபியாவில் கடந்த சில வாரங்களாகவே கடுமையான மழை மற்றும் அதனால் ஏற்பட்ட காற்றாற்று வெள்ளம் என அங்குள்ள மக்கள் பரிதவித்து வருகின்றனர். அடுத்தடுத்த வேலை நிறுத்தம் போன்ற பிரச்சனையால், அங்கு தங்கியிருந்து பணியாற்றி வரும் இந்தியர்களின் வேலைவெட்டுகள் அவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன.
இதனை (எக்ஸ்) ட்விட்டர் பயனர் ஒருவர் தமிழ்நாட்டில் வெப்பநிலையை எதிர்கொள்ள இயலாமல் மக்கள் அவதிப்படுவதாகவும், ஆனால் அபுதாபியில் மழை பெய்து வருகிறது எனவும் கூறியுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.
வெயிலை சமாளிச்ச எங்களுக்கு இந்த மழையை சமாளிக்க முடியாம திணறிக்கிட்டு இருக்கோம்..
— கொள்ளிடத்தான் (@santhoshgulf) May 2, 2024
அபுதாபியில வரலாறு காணாத மழை வெள்ளமா இருக்கு பல இடங்களில் போக்குவரத்து நெரிசலா இருக்கு..
பாத்து கவனமா இருங்க மக்கா..#Abu_Rain.. pic.twitter.com/EHM3q33UZo