இனி பயப்படவே தேவையில்லை.! இரவில் தனியாக செல்லும் பெண்களுக்காக.. தமிழக காவல்துறையின் அசத்தலான புதிய திட்டம்!!



Tamilnadu police New plan for girls safety who travel at night

தற்காலத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி வந்தாலும் இரவு நேரங்களில் பயணிப்பது அவர்களுக்கு பெரும் பிரச்சனையாகவே உள்ளது. மேலும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அதனை தடுக்கும் வகையிலும், வேலையின் காரணமாகவோ பிற காரணத்தினாலோ இரவு நேரங்களில் தனியாக பயணம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தற்போது காவல்துறை புதிய அசத்தலான ஏற்பாட்டை செய்துள்ளது.

Tamilnadu police

இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெண்கள் பாதுகாப்புக்கென புதிய திட்டம் ஒன்றை காவல்துறை அறிவித்துள்ளது. இரவு பத்து மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள் காவல்துறையின் உதவி எண்கள் 1091, 112, 004 - 23452365 அல்லது 044 - 28447701 ஆகியற்றை அழைக்கலாம்.

இந்த எண்ணை தொடர்பு கொண்டால் காவல் ரோந்து வாகனம் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும். மேலும் அனைத்து நாட்களிலும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த சேவை இலவசமாகும் என அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.