96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
வருமான வரித்துறைக்கே நீதிமன்றத்தின் உதவியுடன் செக் வைத்த தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனம்.! இடைக்கால தடை விதிப்பு.!
டாஸ்மாக் நிறுவனம் ரூ.7986 கோடி வருமான வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் வழங்கினார். இதனை எதிர்த்து தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நடந்து, மேல்முறையீடும் செய்யப்பட்டது. அப்போது, இன்றைய விசாரணையில் மதிப்புக்கூட்டு வரி செலுத்தியதற்கு வருமான வரி செலுத்த வேண்டியது இல்லை என டாஸ்மாக் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களை குறித்துவைத்துக்கொண்ட நீதிபதிகள், டாஸ்மாக்குக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டிசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, வருமான வரித்துறை பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.