மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொங்கல்: விஸ்வாசம், பேட்ட படங்களை விட தெறிக்க விட்ட வசூல்; தெரிஞ்சுக்கணுமா...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களில் மட்டும் டாஸ்மாக் மூலம் 500 கோடியை தாண்டி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் எப்பொழுதுமே நஷ்டமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு துறை என்றால் டாஸ்மாக் தான். சாதாரண நாட்களிலேயே வசூல் சிறப்பாக இருக்கும் அதிலும் தீபாவளி பொங்கல் என்றால் சொல்லவே தேவை இல்லை. குறிப்பாக இந்த பொங்கலுக்கு விடுமுறை நாட்களும் அதிகம் என்பதால் குடிமகன்கள் பொங்கலை கொண்டாடித் தீர்த்துள்ளனர்.
இதன் காரணமாக தமிழகத்தில், 5,140 மதுபான கடைகள் மூலம் போகி, பொங்கல், காணும் பொங்கல் ஆகிய 3 நாட்களில் மட்டும் மதுபான விற்பனை ரூ.500 கோடியை தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டு விற்பனையை விட 10 சதவீதம் அதிகமாகும்.
கடந்த தீபாவளியின் போது ரூ. 328 கோடிக்கு மதுவிற்பனையானது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையில் அதைவிட கூடுதலாக ரூ.175 கோடிக்கு மதுபான விற்பனையாகியுள்ளது.