மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தேசிய கொடியை அவமதித்த ஆசிரியர்!. முற்றுகையிட்ட பா.ஜ.க-வினர்!.. கைது செய்த போலீசார்..!
தாராபுரம் அருகே, தேசியக்கொடியை அவமதித்ததாக, தனியார் பள்ளி ஆசிரியரிடம், போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகேயுள்ள குறிஞ்சி நகரை சேர்ந்தவர் எட்வின் (34) இவர் தாராபுரம், உடுமலை ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சுதந்திர தினத்தை ஒட்டி, நேற்று அவர் வாடகைக்கு வசிக்கும் வீட்டின் முன்பு தேசியக் கொடியை கட்டியுள்ளார்.
அந்த கொடியில் 'இயேசுவே இந்தியாவை ஆசீர்வதியும்' என்று எழுதப்பட்டிருந்தது. இதனை அறிந்த பா.ஜனதா கட்சியினர் ஆசிரியர் எட்வின் வீட்டை முற்றுகையிட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து அறிந்த தாராபுரம் காவல்துறையினர் ஆசிரியர் எட்வினை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதனை அறிந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பா.ஜனதா கட்சியினர், தேசியக்கொடியை அவமதித்த ஆசிரியர் எட்வினை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆசிரியர் எட்வினிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.