திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளி ஆசியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு..! தமிழக அரசு அதிரடி..!!
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியமானது உயர்த்தி வழங்கப்படவேண்டும் என்று கோரிக்கை இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று தமிழக அரசு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்படுகிறது.
இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.12000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15,000, முதுநிலை ஆசிரியர்களுக்கு ரூ.18000 ஊதியமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இது ஆசிரியர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.