குடிக்க பணம்தர மறுப்பு: பெற்றெடுத்த தாயை தீவைத்து, கொளுத்திய மகன்.. பரிதாபமாக பறிபோன உயிர்.!



Tenkasi Sankarankovil Mother Killed by Son 


மது என்னும் அரக்கனால் ஒவ்வொரு நாளும் எங்கோ ஒரு நகரில் உயிர் பறிபோவது தொடர்கதையாகி இருக்கிறது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் ராமலட்சுமி (வயது 65). இவரின் மகன் சங்கர நாராயணன் (வயது 43). 

மதுபோதைக்கு அடிமையான சங்கர நாராயணன், எப்போதும் மதுபானத்தை அருந்தி ஊரைச்சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. 

சம்பவத்தன்று தனது தாயிடம் மதுபானம் அருந்த பணம் கேட்டு இருக்கிறார். அவர் தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த சங்கர நாராயணன், தாய் ராமலட்சுமியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். 

தன்னை காப்பாற்றக்கூறி அலறி ஓடியும், கயவன் விரட்டிவிரட்டி சென்று மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தததாக கூறப்படுகிறது. 

உடலில் தீப்பற்றி எரிந்து ராமலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், ராமலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், தாயை கொலை செய்த மகன் சங்கர நாராயணனின் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.