மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரசுப்பள்ளி மாணவி தற்கொலை.. ஆங்கில ஆசிரியர் கைது.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!
வடசேரி அரசுப்பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், காவல் துறையினரால் ஆங்கில ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி கிராமத்தை சேர்ந்த மாணவி, வடசேரியில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வந்துள்ளார். பள்ளியில் தேர்வுகள் நடந்து வருவதால், நேற்று காலை பள்ளிக்கு சென்ற மாணவி, காலை 11:30 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார்.
மாணவி வகுப்பறையில் இல்லாததால் சந்தேகமடைந்த ஆசிரியர்கள், மாணவியின் வீடும் தெரியாமல் அவரை தேடி அலைந்துள்ளனர். மேலும், மாணவனின் சகோதரனிடம் வீட்டிற்கு சென்று பார்த்து வர ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அப்போது, சகோதரன் வீட்டிற்கு சென்று பார்க்கையில், தனது சகோதரி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அலறி இருக்கிறார்.
இவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பாப்பநாடு காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றது.
விசாரணையின் போது, பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் கணேசன் (வயது 31), மாணவியை தகாத வார்த்தையால் திட்டியதால் அவர் தற்கொலை செய்துகொண்டது உறுதியானது. இதனையடுத்து, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த வடசேரி அரசுப்பள்ளி ஆங்கில ஆசிரியர் கணேசனை அதிகாரிகள் கைது செய்தனர்.