சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
நரிக்குறவர்கள் இறக்கிவிடப்பட்ட விவகாரம்: தீவிரமாக பரவிய வீடியோ.! போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கை.!

நரிக்குறவர் குடும்பத்தினரின் உடமைகளை வெளியில் போட்டு, தாய், தந்தை, குழந்தை ஆகியோரை பேருந்திலிருந்து இறக்கி விட்ட ஓட்டுநர், நடத்துனர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் நாள்தோறும், நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த மக்கள் பயணிப்பது வழக்கம். அதன்படி, நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு புறப்பட்ட பேருந்தில் சிறுவன் உட்பட 3 பேர் கொண்ட நரிக்குறவர் குடும்பத்தினர் பயணித்துள்ளனர்.
அப்போது, பேருந்தின் நடத்துனர் அவர்களை வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து பாதி வழியில் இறக்கி விட்டுள்ளார். இது குறித்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மீனவ பெண்மணியை பேருந்தில் ஏற்ற மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், தற்போது வெளியாகி உள்ள வீடியோ மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நரிக்குறவர் குடும்பத்தினரை நடுவழியில் இறக்கி விட்டு பொறுப்பற்ற முறையில் பணி செய்து அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்திய ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது