மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாணவிகளிடம் கண்ட இடத்தில் கைவைத்து பாலியல் தொல்லை அளித்த தாளாளர்... குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார்...!!
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் அரசு உதவி பெறும் பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் குதுப்புன் நஜிப் (47) என்பவர் தாளாளராக இருந்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிகளை கண்ட இடத்தில் தொட்டு, அடிக்கடி பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதுதொடர்பாக மாணவிகள் புகார் அளித்துதும் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது தொடர்பாக பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன் பின்னர் குதுப்புன் நஜிப் கைது செய்யப்பட்டார்.
மாணவிகள் புகார் அளித்தும் இந்த சம்பவத்தை மூடி மறைக்க முயன்ற பள்ளி தலைமை ஆசிரியை காதரம்மாள், தாளாளரின் மனைவி முகமது பாத்திமா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து குதுப்புன் நஜீப் தாளாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குதுப்புன் நஜீப்பை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நெல்லை கிழக்கு காவல் துணை கமிஷனர் பரிந்துரையை ஏற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.