மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வழக்கறிஞரை வழிமறித்து சரமாரியாக வெட்டி சரித்த மர்ம கும்பல்!!.. பெருங்குடியில் பரபரப்பு..!!
சென்னை, திருவான்மியூர் அருகேயுள்ள பெருங்குடி ராஜீவ்நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (33). இவர் சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருணமாகி முருகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவருடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆகும்.
இந்த நிலையில், ஜெய்கணேஷ் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் பெருங்குடியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடினார். பின்னர் இரவு வீட்டுக்கு திரும்பி வந்த ஜெய்கணேஷை, அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி சரித்துவிட்டு தப்பி ஓடியது.
எதிர்பாராத இந்த தாக்குதலில் நிலைகுலைந்த ஜெய்கணேஷ் பலத்த வெட்டுக்காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த துரைப்பாக்கம் காவல்துறையினர், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே மருத்துவமனையில் திரண்ட ஜெய்கணேஷின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.