மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலிக்க மறுத்த நர்சிங் மாணவி!. பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபர்!.. மடக்கிப் பிடித்த பப்ளிக்..!
காதலிக்க மறுத்த நர்சிங் மாணவியை பீர்பாட்டிலால் தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆவடியை அருகே உள்ள பட்டாபிராம் பகுதியில் வசிக்கும் 16 வயது மாணவி, நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் அவரது செல்போனில் தனது தோழியை தொடர்பு கொள்ள முயன்ற போது தவறுதாக சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரி, கேண்டீனில் வேலை செய்யும் பண்ருட்டியைச் சேர்ந்த அய்யப்பன் (23) என்பவருக்கு அந்த அழைப்பு சென்றுவிட்டது. உடனடியாக இணைப்பை துண்டித்துள்ளார் அந்த மாணவி.
செல்போனில் மிஸ்டுகாலை பார்த்த அய்யப்பன், அந்த எண்ணில் தொடர்பு கொண்டார். அப்போது மாணவி தவறுதலாக போன் செய்ததாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து நர்சிங் மாணவிக்கும், அய்யப்பனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக அடிக்கடி இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர்.
வாட்ஸ் அப் மற்றும் முகநூல் மூலம் பழக்கம் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் திடீரென அய்யப்பன் நர்சிங் மாணவியை காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவி, நட்பாக பழகியதாக சொல்லி அவரது காதலை மறுத்துள்ளார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் அம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து வெங்கடாபுரம் அருகே கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்த மாணவியிடம் தன்னை காதலிக்கும்படி அய்யப்பன் வற்புறுத்தியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அய்யப்பன், மறைத்து வைத்து இருந்த பீர்பாட்டிலை எடுத்து மாணவியின் தலையில் தாக்கினார். இதில் அந்த மானவி காயம் அடைந்தார். உடனே அங்கிருந்த பொதுமக்கள், அய்யப்பனை மடக்கி பிடித்து அம்பத்தூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் தாக்குதலுக்கு உள்ளான மாணவியை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.