#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னையா வீடியோ எடுக்கற?!: குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞரை மடக்கிப் பிடித்த பெண் போலீஸ்..!
சென்னை, அயனாவரம் வசந்தா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் இளம் பெண் (23). இவர் காவல்துறையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று காலை தனது வீட்டில் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டு இருந்துள்ளார்.
அப்போது குளியலறையின் பக்கவாட்டு ஜன்னல் வழியாக ஒருவர் உள்ளே எட்டிப் பார்ப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், உடனடியாக ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே வந்து பார்த்தபோது, குளியலறையை எட்டிப் பார்த்தது பக்கத்து வீட்டில் வசிக்கும் வேன் டிரைவர் வசந்த் (26) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை மடக்கி பிடித்து, அவரது கையில் இருந்த செல்ஃபோனை சோதனையிட்டதில், தான் குளிப்பதை செல்ஃபோனில் வீடியோ எடுத்து தெரியவந்தது. இதனையடுத்து செல்போனை பறிமுதல் செய்த இளம்பெண் காவலர், அவரை அயனாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.