திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திருமணமான 9 மாதத்தில் உயிரிழந்த இளம் பெண்!.. திருப்பத்தூர் அருகே பரிதாபம்...!!
திருமணமான ஒன்பது மாதத்தில் திருப்பத்தூர் அருகே இளம்பெண் உயிரிழந்தார். எனவே இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் இருக்கும் ஊர்குளத்தான்பட்டி கிராமத்தில் வசிக்கும் சிவபிரகாசத்தின் மகன் கந்தசாமிக்கும் அதே பகுதியை சேர்ந்த சினேகா என்பவருக்கும் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணமான ஒரு மாதத்தில் கந்தசாமி வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார். எனவே சினேகா கணவர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சினேகாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்ததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று சிகிச்சைக்கு மதுரையில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு சினேகா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஊர்குளத்தான்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கோகிலா தேவி திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான ஒன்பது மாதத்தில் சினேகா உயிரிழந்ததால் இந்த சம்பவம் தொடர்பாக தேவக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை விசாரணை நடத்தி வருகிறார்.