மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சொந்த மகளை சீரழித்து தாயாக்கிய தகப்பன்.. அப்பாவி இளைஞர் மீது பழி.. உண்மையை உடைத்த டி.என்.ஏ சோதனை.!
தான் பெற்றெடுத்த சொந்த மகளை சீரழித்த தந்தை, மகள் கர்ப்பமாகி குழந்தை பிறந்ததும் அவமானத்திற்கு பயந்து உறவுக்கார வாலிபரை சிறையில் தள்ளி, டி.என்.ஏ சோதனையில் சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், தேவதானப்பட்டி பகுதியை சார்ந்த திருமணம் ஆகாத 16 வயது சிறுமிக்கு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த பிப். 10 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், தேனி அனைத்து மாவட்ட காவல் துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தி இருந்தனர்.
இதன்போது, சிறுமியின் தந்தையான சாமியார் தேவதானப்பட்டி, கள்ளிப்பட்டி பகுதியை சார்ந்த உறவுக்கார பையன் மகளை கர்ப்பமாக்கியதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வாலிபரின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைதான வாலிபரோ சிறுமியின் குழந்தைக்கு நான் தந்தை இல்லை என்று கூறி, டி.என்.ஏ பரிசோதனை செய்ய தயாராக இருக்கிறேன் என நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து, சிறுமி மற்றும் இளைஞர், பிறந்த குழந்தை ஆகியோருக்கு டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் டி.என்.ஏ பரிசோதனை நடைபெற்ற நிலையில், குழந்தை இளைஞருக்கு பிறக்கவில்லை என்பது உறுதியானது. இதனால் சிறுமியின் தந்தை மீது சந்தேகம் ஏற்பட்டு, காவல் துறையினர் அவருக்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்தியுள்ளனர். இதன்போது, சிறுமியின் தந்தை தான் தனது மகளுக்கு பிறந்த குழந்தைக்கு காரணம் என்பது உறுதியானது.
மேலும், பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை, மகள் கர்ப்பமாக இருந்ததை அறிந்து இருக்கிறார். விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று எண்ணிய நிலையில், பிரசவத்தின் போது காவல் துறையினர் வசம் விசாரணை சென்று, உறவுக்கார இளைஞரின் மீது பழியை போட்டு சிறையில் அடைத்தும் அம்பலமானது.
இதனைத்தொடர்ந்து, சிறுமியின் தந்தையை கைது செய்த தேனி காவல் துறையினர், அவரின் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடித்தனர். சிறுமி, சிறுமியின் ஆண் குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அப்பாவி இளைஞர் விடுதலை செய்யப்பட்டார்.