மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளம் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை; உடலை வாங்க மறுக்கும் பெற்றோர்கள்.. தேனியில் பரபரப்பு.!
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், காந்தி நகரில் வசித்து வருபவர் மாரிமுத்து (வயது 22). கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அப்பகுதியில் 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் காதலாக மாறியுள்ளது.
இதனால் இருவரும் ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இந்நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனையடுத்து, காதல் ஜோடி கடந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறி, காந்தி நகரில் உள்ள மாந்தோப்புக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது. இதனால் உறவினர்கள் இருவரின் உடலையும் வாங்கி செல்ல மறுத்து போராட்டம் செய்தனர்.
சமாதான முயற்சிகளுக்கு பின்னர் பெண்ணின் பெற்றோர் சிறுமியின் உடலை வாங்கி சென்றனர். மாரிமுத்துவின் பெற்றோர் உடலை வாங்க மறுத்து, வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குபதிய, இழப்பீடு வழங்க போராட்டம் செய்தனர்.
தொடர்ந்து பல நாட்களாக பேச்சுவார்த்தை நட்ட்பட்டு வரும் நிலையில், முடிவு தொடர்ந்து எட்டப்படாத காரணத்தால் இந்திய ஜனநாயக முற்போக்கு இயக்கத்தினர் நேற்று காந்திநகர் கும்பக்கரை பிரிவில் வீட்டில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் செய்தனர்.
தகவல் அறிந்து சென்ற காவல் துறையினர் கருப்பு கொடிகளை அகற்றிவிட்டு, 9 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 8 நாட்களை கடந்தும் மாரிமுத்துவின் உடல் உறவினர்களால் பெறப்படவில்லை என்பதால், பதற்றமான சூழல் நிலவுகிறது.
கொடிகளை அகற்றினர். மேலும் கொடிகளை கட்டியதாக 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 8 நாட்களாக மாரிமுத்துவின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்ளாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.