மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சொத்தில் பங்கு கிடைக்காததால், கணவனின் மூத்த தாரத்தின் மகனை கொலை செய்த சித்தி.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்.!
பெரியகுளம் அருகே சொத்தில் பங்கு கொடுக்காத மூத்த தாரத்தின் மகனை கொலை செய்த பகீர் சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், காமாட்சிபுரம் கிராமத்தில் உள்ள குப்பைத்தொட்டியில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ஆணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தடயவியல் நிபுணர்கள் உடலை ஆய்வு செய்கையில் உடலில் பல்வேறு வீட்டுக்காயம் இருப்பது உறுதியானது. விசாரணையில், காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த சிங்காரவேலு என்பவரின் மூத்த தாரத்து மகன் செந்தில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியானது. பல வருடத்திற்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி சென்ற செந்தில், வடமாநிலத்தில் சாமியார் போல் வலம்வந்துள்ளார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக செந்தில் ஊருக்கு வந்த நிலையில், தனது பெயரில் இருந்த 4 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்துள்ளார். அப்போது, சிங்காரவேலுவின் இரண்டாவது மனைவி ரத்னகிரி மற்றும் அவரின் மகன் செல்வகுமார், நிலம் விற்பனை செய்த பணத்தில் பங்கு கேட்டுள்ளனர். பங்கு கொடுக்க செந்தில் மறுப்பு தெரிவித்ததால், கூலிப்படை வைத்து கொலை நடந்துள்ளது.
கொலையை அரங்கேற்றிய சிங்காரவேலுவின் இரண்டாவது மனைவி மற்றும் மகன், செந்திலை கொலை செய்து உடலை பெட்ரோல் ஊற்றி எரித்து குப்பையில் வீசி சென்றுள்ளனர். இதனையடுத்து, இரத்தினகிரி மற்றும் செல்வகுமார் உட்பட 4 பேரை கைது செய்த காவல் துறையினர், அவர்களை சிறையில் அடைத்தனர்.