வடமாநில தொழிலாளர்களுக்கும் வாக்குவாதம்.. 4 பேர் கும்பலால் இளைஞர் குத்தி கொலை; தேனியில் அதிர்ச்சி சம்பவம்.!



Theni Sinnamanur Man Killed by 4 Man gang

 

ஒன்றாக வேலைபார்த்து வந்த 5 இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டார்.

தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர், சாமிக்குளம் பகுதியில் தனியார் பழைய பிளாஸ்டிக் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் 5 வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று குடோனில் பணியாற்றி வரும் பிரதீப் மான்சி என்ற நபருக்கும், பிற ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதமானது கைகலப்பாக மாறவே, ஆத்திரத்தில் பிற ஊழியர்கள் பிரதீப்பை கொலை செய்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து பிரதீப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.