இராணுவ வீரரின் உடையில் வழிப்பறியில் ஈடுபட்ட வடக்கன்.. அலேக்காக தூக்கிய பப்ளிக்.!



Thiruvallur Sholavaram Area Man Used Army Dress Robbery

இராணுவ அதிகாரியின் சீருடையில் வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநிலத்தை சார்ந்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சேலம் மாவட்டத்தை சார்ந்த லாரி ஓட்டுநர் சதீஷ் குமார். இவர் கேரளாவில் இருந்து ரப்பர் பொருட்களை ஏற்றிக்கொண்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம், இருளிப்பட்டு பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு சென்று கொண்டு இருந்தார். 

சதீஷ் குமாரின் லாரி ஜனபஞ்சசத்திரம் அருகே சென்ற நிலையில், லாரியை எடை போடுவதற்கு நிறுத்தியுள்ளார். அப்போது, அங்கு இராணுவ வீரரின் உடையில் வந்த நபரொருவர், சதீஷ் குமாரிடம் லாரி ஆவணத்தை சோதிக்க வேண்டும் என்று கூறி, கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தியை காண்பித்து வழிப்பறி செய்துள்ளார். 

thiruvallur

மேலும், ரூ.3 ஆயிரம் பணத்தை கத்தியை காண்பித்து பறித்து இருக்கிறார். எதற்ச்சையாக இவ்விஷயத்தை கவனித்த அப்பகுதி மக்கள், இராணுவ வீரரின் உடையில் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

சோழவரம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், வழிப்பறியில் ஈடுப்பட்ட நபர் இராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்த சத்யவீர் என்பதும் உறுதியானது. இவர் இராணுவ அதிகாரியின் சீருடையை திருடி, தன்னை இராணுவ அதிகாரி போல பாவித்து வழிப்பறியில் ஈடுபட்டதும் அம்பலமானது. சத்யவீரை கைது செய்த அதிகாரிகள், பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.