மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கழிவறையில் பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்ட விவகாரம்.. பெண் பரபரப்பு கைது.. அதிர்ச்சி வாக்குமூலம்.!
தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் பச்சிளம் பெண் சிசு மீட்கப்பட்ட விவகாரத்தில், பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கணவரை இழந்து வாழ்ந்து வந்த பெண்ணின் திருமணம் இல்லாத காதல் (கள்ளக்காதல்) காரணமாக உயிர் பிறந்து இறந்தது அம்பலமானது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம், அத்திப்பேடில் தனியார் மருத்துவமனை செயல்படுகிறது. இம்மருத்துவமனையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கழிவறையில் தொப்புள் கொடியுடன் பிறந்த பெண் குழந்தையின் சடலம் இருந்தது. இந்த விஷயம் தொடர்பாக சோழவரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, மருத்துவமனை வளாகத்தில் இருந்த சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்து பார்க்கையில், கர்ப்பிணி பெண்ணொருவர் ஆட்டோவில் வந்து இறங்கி, பின்னர் மருத்துவமனையில் இருந்து சர்வ சாதரணமாக செல்லும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பெண் குறித்து விசாரணை செய்கையில், அவர் கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வரும் சாய்ரா பானு (வயது 33) என்பது தெரியவந்தது.
அவரை கைது செய்த அதிகாரிகள், சோழவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், சாய்ரா பானுவிற்கு திருமணம் முடிந்து கணவர் இருந்த நிலையில், அவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்னதாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், சாய்ரா பானுவிற்கு சமீபத்தில் வாலிபருடன் பழக்கம் ஏற்படவே, அவருடன் நெருங்கி பழகிய காரணத்தால் கர்ப்பமாகி இருக்கிறார்.
அதனைத்தொடர்ந்து, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெண்மணிக்கு குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில், கடந்த மார்ச் 2 ஆம் தேதி ஆட்டோவில் மருத்துவமனைக்கு வந்த பெண் செவிலியினரிடம் வயிற்று வலி இருப்பதாகவும், கழிவறைக்கு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். கர்ப்பிணி பெண்ணின் நிலையை உணர்ந்த செவிலியரும் சந்தேகப்படாத நிலையில், அவர் கழிவறையில் குழந்தையை பிரசவித்து சாதரணமாக வீட்டிற்கு சென்றது அம்பலமானது. பெண்ணிடம் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.