மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சுற்றுலா வேன் - லாரி மோதி விபத்து.. 1 வயது குழந்தை உட்பட 3 பேர் பலி.! 15 பேர் படுகாயம்.!!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வல்லநாடு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக பலியாகினர். சுற்றுலா வேன் மற்றும் டிப்பர் லாரி மோதிக்கொண்ட விபத்தில் வேனில் பயணம் செய்த குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
வேனில் பயணம் செய்த 15 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். சக வாகன ஓட்டிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
ஒரு சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் அவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். விபத்து குறித்து முதற்கட்ட விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இவர்கள் வட மாநில சுற்றுலா பயணிகள் என்பது தெரியவந்துள்ளது.