ஆட்சியர் உத்தரவுக்கே மதிப்பில்லையா? ஸ்ரீவைகுண்டத்தில் வீதியில் இறங்கிய பொதுமக்கள்.. கடும் வாக்குவாதம்.!



Thoothukudi Srivaikundam Peoples Protest for Bus Service 


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் நகரம், திருச்செந்தூர் - திருநெல்வேலி வழித்தடத்தில் அமைந்துள்ள முக்கிய நகரம் ஆகும். இந்நகரை நெல்லை - செந்தூர் சாலையில் உள்ள ஆற்றுப்பாலத்தை பயன்படுத்தி போக்குவரத்து இயக்கப்படுகின்றன. முக்கிய நகரமான ஸ்ரீவைகுண்டத்தில், கடந்த சில மாதமாகவே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வந்து செல்வதில்லை. 

இதனால் ஊர் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த நிலையில், நேற்று முன்தினம் ஆட்சியர் நேரில் வந்து ஆய்வு செய்தார். அப்போது, ஊருக்குள் செல்லாத 5 அரசு பேருந்துகள், 1 தனியார் பேருந்து என 6 பேருந்துகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.60000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இனி ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிறுத்தத்திற்குள் வந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: தக்காளி சட்னியில் விழுந்த பல்லி; விடுதி மாணவர்களுக்கு இரவு உணவில் காத்திருந்த அதிர்ச்சி.!

இந்நிலையில், இன்று அரசு & தனியார் பேருந்துகள் வழக்கம்போல ஸ்ரீவைகுண்டத்தை புறக்கணித்தது. இதனால் 100 க்கும் மேற்பட்ட மக்கள் ஸ்ரீவைகுண்டம் பிரிவு, நெல்லை - செந்தூர் சாலையில் பேருந்துகளை மறித்து வாக்குவாதம் செய்தனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கே மதிப்பில்லையா? என மக்கள் வாக்குவாதம் செய்து போராட்டம் அந்தாதி வருகின்றனர். 

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பின்னர் ஸ்ரீவைகுண்டம் பேருந்து பிரச்சனை முடிக்கப்பட்டதாக மக்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், இன்று மீண்டும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஸ்ரீவைகுண்டத்தை புறக்கணித்தது அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

இதையும் படிங்க: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; சமையலர் போக்ஸோவில் கைது.!