தக்காளி சட்னியில் விழுந்த பல்லி; விடுதி மாணவர்களுக்கு இரவு உணவில் காத்திருந்த அதிர்ச்சி.!



Thoothukudi Tiruchendur 8 Affected ill Chutney with Lizard 

 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர், மணப்பாடு மீனவ கிராமத்தில், மாணவர்கள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ - மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். 

இதனிடைய, நேற்று இரவில் மாணவர்களுக்கு உணவாக தோசை வழங்கப்பட்ட நிலையில், தக்காளி சட்னி தொட்டுக்கொள்ள வழங்கப்பட்டது. இதனை சாப்பிட்ட மாணவர்கள் அடுத்தடுத்து வாந்தி, மயக்கத்திற்கு உள்ளாகினர். 

இதையும் படிங்க: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; சமையலர் போக்ஸோவில் கைது.!

Thoothukudi

மருத்துவமனையில் அனுமதி

இதனால் உடனடியாக அவர்களை மீட்ட விடுதி நிர்வாகத்தினர் மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அவர்களுக்கு உடனடி சிகிச்சை வழங்கப்பட்டது.

இதனிடையே, தகவல் அறிந்து வந்த குலசேகரப்பட்டினம் காவல்துறையினர், மாணவர்களின் உடல் நலக்குறைவுக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மாணவர்கள் சாப்பிட்ட தக்காளி சட்னியில் பல்லி விழுந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க: தூத்துக்குடி: வீடு ஜப்தியால் லாரி ஓட்டுநர் தற்கொலை; வல்லநாட்டில் இன்று கடையடைத்து மக்கள் போராட்டம்.!