ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சு வலி.. 46 பேரின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்.. தப்பித்த பள்ளி மாணவர்கள்.!



Tirupathur Vaniyambadi Vaani School Bus Accident 

 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில், வாணி தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 

சம்பவத்தன்று, இப்பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று, 46 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களுடன் வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தது. 

இதையும் படிங்க: தலைக்கவசம் அணியாததால் விபரீதம்.. நிலைதடுமாறி ஏற்பட்ட விபத்தில் இளைஞர் மரணம்.!

அப்போது, வேன் ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் வேனை மிதமான வேகத்தில் இயக்கிய ஓட்டுநர், பெரும் விபத்தை தவிர்க்க சாலை சென்டர் மீடியனில் மோதி வாகனத்தை நிறுத்தினார். 

நல்வாய்ப்பாக தனது உயிர் ஊசலாடும் நிலையிலும், ஓட்டுநர் சுதாரித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக ஓட்டுனரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். 

இந்த விபத்து தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி கேமிரா காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: இராமநாதபுரம்: கார் - அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி பயங்கரம்.. 3 பேர் பலி..!