திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
குடும்ப சண்டையில் பெண்ணின் அதிர்ச்சி முடிவால் நடந்த சோகம்.. ஆம்பூரில் பரிதாபம்.!
கணவன் - மனைவி குடும்ப சண்டையில் பெண்மணி மர்ம மரணம் அடைந்துள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் சாமியார்மடம், மேலகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 34). இவர் தனியார் மருந்து நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி நந்தினி (வயது 26). இவர்கள் இருவருக்கும் கடந்த 3 வருடத்திற்கு முன்னர் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை இருக்கும் நிலையில், கணவன் - மனைவி இடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் நந்தினி எப்போதும் மன உளைச்சலுடன் காணப்பட்டு வந்துள்ளார். நேற்றும் தம்பதிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சண்டை முடிந்ததும் இரவில் இருவரும் உறங்க சென்றுள்ளனர்.
இந்நிலையில், நந்தினி இன்று காலை தூக்கில் பிணமாக தொங்குவதாக, ஆம்பூர் நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து நந்தினியின் தந்தை முரளி, மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் முடிந்து 3 வருடமே ஆவதால், கோட்டாட்சியர் விசாரணையும் நடந்து வருகிறது.