மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடும்ப சண்டையில் விபரீதம்.. இராணுவ வீரரின் மனைவி அதிர்ச்சி செயல்.. பறிபோன உயிர்.!
கணவன் - மனைவியிடையே நடந்த குடும்ப சண்டையால் மனமுடைந்து போன இராணுவ வீரரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, பால்னாங்குப்பம் - மச்சகண்ணன் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரின் மகன் ஜெகன் (வயது 31). இவர் இராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். வேலூர் மாவட்டம் குடியாத்தம், கல்லப்பாடி - வெங்கத்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ரேவதி (வயது 27).
ஜெகனுக்கும் - ரேவதிக்கும் கடந்த 2017 ஆம் வருடம் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், தம்பதிகள் இருவருக்கும் யாஷிகா (வயது 2) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 13 ஆம் தேதி ஜெகன் விடுமுறை எடுத்து சொந்த ஊர் வந்துள்ளார்.
அப்போது, தம்பதிகளுக்கு இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து வந்த ரேவதி, நேற்று நள்ளிரவில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக ஜோலார்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ரேவதியின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ரேவதியின் தந்தை அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.