மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பறந்துவந்த தீப்பொறி பட்டு.. பெட்ரோல் நிரப்பிய பாலிடெக்னீக் மேலாளர் பரிதாப மரணம்.!
பெட்ரோல் நிரப்புகையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாலிடெக்னீக் மேலாளர் பரிதாபமாக பலியாகினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, சின்னகம்மியம்பட்டு பகுதியை சார்ந்தவர் ராஜா (வயது 56). இவர் திருப்பத்தூர் அருகேயுள்ள தனியார் பாலிடெக்னீக் கல்லூரியில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி சாந்தி. இவர்கள் இருவருக்கும் ராகவன், பிரதீப் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
சம்பவ நாளில், ராஜா இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுகொண்டு இருந்துள்ளார். இதன்போது, திடீரென எங்கிருந்தோ பறந்து வந்த தீப்பொறி பெட்ரோல் மீது விழுந்து பற்றி எரிந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜா திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.
பின்னர், அங்கு உடல்நிலை தொடர்ந்து மோசமாகவே, மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ராஜா பெட்ரோல் நிரப்புகையில் போதையில் இருந்தாரா? தற்கொலை செய்து கொண்டாரா? கொலையா? என்ற கோணத்தில் ஜோலார்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.