மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாட்டுச்சாணத்துடன் கஞ்சா கலந்து விற்பனை; இதிலும் போலி வந்திருச்சா?.. திருப்பூரில் கும்பல் கைது.!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில், கஞ்சா நடமாட்டத்தை ஒழிக்க காவல் துறையினர் தீவிர தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அங்குள்ள பழக்குடோன் பகுதியில் சோதனை நடைபெற்றது.
அச்சமயம் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. அப்போது இளைஞர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், இவர்கள் ரூ.33 ஆயிரம் பணம் கொடுத்து கஞ்சா வாங்கி வந்தது தெரியவந்தது. இவர்கள் கும்பலாக சேர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர்.
கஞ்சாவுக்கு அவ்வப்போது நிலவும் தட்டுப்பாடு மற்றும் கொள்ளை இலாபம் வேண்டி கஞ்சாவுடன் மாட்டுச்சாணம் கலந்து விற்பனையில் ஈடுபட்டதும் அம்பலமாகி இருக்கிறது.