பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சாலைத்தடுப்பில் மோதி, பேருந்தில் இடித்து சினிமா பாணியில் அப்பளமாய் நொறுங்கிய கார் - 3 பேர் துள்ளத்துடிக்க பலி..!
தாராபுரம் அருகே நடந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுகொண்டு இருந்தது. கொடுவாய் பேருந்து நிலையம் அருகே பேருந்து சென்ற சமயத்தில், எதிர்திசையில் இன்னோவா கார் அதிவேகத்துடன் வந்துள்ளது.
கார் சாலைத்தடுப்பு சுவரில் மோதி மறுமுனைக்கு பாய்ந்து பேருந்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் காரின் முன்புறம் சிதைந்து அப்பளமாக நொறுங்க, காரில் இருந்த 6 பேரில் 3 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
எஞ்சிய 3 பேர் படுகாயத்துடன் அலறித்துடித்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.