திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
14 வயது சிறுமியை. கடத்தி கற்பழித்த 22 வயது இளைஞன்.. காதல் பெயரில் பகீர் செயல்..!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை கொமரலிங்கம் பகுதியில் 14 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் எட்டாம் வகுப்பு வரை பயின்று விட்டு, மேற்படி படிக்காமல் வீட்டில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி சிறுமி வீட்டிலிருந்து மாயமாகவே அவரை தேடிய பெற்றோர், உடுமலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கிய நிலையில், சிறுமி தாராபுரம் பகுதியில் இருப்பது உறுதியானது.
சிறுமியை மீட்ட அதிகாரிகள், அவருடன் இருந்த தாராபுரம் பகுதியைச் சார்ந்த தவசியப்பனை (வயது 22) கைது செய்தனர். விசாரணையில், 14 வயதுடைய சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய தவசியப்பன், அவரை கடந்த 14 ஆம் தேதி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது அம்பலமானது.
இதனையடுத்து தவசியப்பனின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.