மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செயின் திருடனுக்கு கிடைத்த உடனடி தண்டனை; பெண்ணிடம் நகை பறித்த சில நிமிடங்களில் விபத்தில் கொடூர மரணம்.!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையையை சேர்ந்த பெண்மணி, பொள்ளாச்சி சாலையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்துள்ளனர்.
பெண்மணி தனியே வருவதை நோட்டமிட்ட நபர்கள், பெண்ணின் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இவர்கள் அங்கிருந்து தப்ப இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளனர்.
அச்சமயம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த சஞ்சய் குமார் மற்றும் அவரின் நண்பர் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.