திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பருவ காதலால் 7 மாத கைக்குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்த 16 வயது சிறுமி.. நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சோகம்.!
16 வயது சிறுமி 7 மாத கைக்குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், சிறுமியின் காதலன் கைது செய்யப்பட்டுள்ளான்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, மடத்துக்குளம் காரத்தொழுவு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இதே கிராமத்தை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 21). இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில், பொன்ராஜ் அதனை காதலாக மாற்றி இருக்கிறார்.
சிறுமியிடம் காதல் வார்த்தை கூறி பேசிய பொன்ராஜ், அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமாகவே, விஷயம் பெற்றோருக்கு தெரியவந்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் பொன்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுமி கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் இல்லத்தில் சேர்க்கப்பட்ட நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்னதாக சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதன்பின்னர், பெற்றோர் மகளை வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில், பொன்ராஜும் ஜாமினில் வெளியே வந்து கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் தனியாக இருந்த சிறுமி, தனது கைக்குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். பின்னர், இருவரும் மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுமி மற்றும் கைக்குழந்தை உயிரிழந்துவிடவே, தகவல் பொன்ராஜுக்கு தெரியவந்து தலைமறைவாகியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நேற்று பொன்ராஜை கைது செய்தனர்.
படிக்கும் வயதில் திரைப்படங்களை பார்த்து பருவ வயது காதலை பெரிதாக எண்ணி காதலனின் இச்சைக்கு ஒத்துழைத்தால், வாழ்க்கை எப்படியான விபரீத முடிவை எடுக்கவைத்து சோகத்தை தரும் என்பதற்கு இந்த சம்பவமும் ஓர் சாட்சியாக அமைந்துள்ளது.