#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கால்வாயில் குதித்து கோவை வயோதிக தம்பதி தற்கொலை: திருப்பூரில் சோகம்.!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, திருமூர்த்தி அணைக்கு கீழ் காண்டூர் கால்வாய் மூலமாக சர்க்கார்பதி பவர் ஹவுசில் இருந்து நீர் திறக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை 70 வயதுடைய முதியவர், 60 வயதுடைய அவரின் மனைவி கால்வாய்க்கு வருகை தந்தனர். இருவரும் கால்வாயில் குதிக்க முயற்சிப்பதை கண்ட மாடு மேய்த்தவர்கள் எச்சரித்து இருக்கின்றனர்.
இதனை கண்டுகொள்ளாத தம்பதி கால்வாயில் குதித்து, ஒரு கி.மீ தூரம் நீரில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் கோவையை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காவல் துறையினர் மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர்.