சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
தீபாவளி, பொங்கல் ஏலசீட்டு என ரூ.1,200 கோடி மோசடி.. திருவண்ணாமலை VRS சிட் பண்ட் அதிர்ச்சி செயல்.. ஏஜெண்டுகள் கண்ணீர் கதறல்..!

மாதம் ரூ.500 செலுத்தினால் 1 ஆண்டில் 2 கிராம் தங்க மோதிரம் வழங்குவதாக மோசடி நடைபெற்ற நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் இருக்கும் முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு பகுதியை சேர்ந்தவர் மொய்தீன். இவர் வி.ஆர்.எஸ் என்ற நிதி நிறுவனம் நடத்தி வந்த நிலையில், அதில் சிறுசேமிப்பு திட்டம் தொடங்கியுள்ளதாக கூறி மாதம் ரூ.500 வாங்கியுள்ளார்.
மக்கள் மாதாமாதம் ரூ.500 வழங்கினால் ஆண்டின் முடிவில் 2 கிராம் தங்க மோதிரம் மற்றும் பிற பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். வந்தவாசி, செய்யாறு உட்பட பல இடங்களில் அலுவலகம் ஏற்படுத்தி, பணத்தை வசூலித்து கொடுக்க ஏஜெண்டுகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறாக மக்களிடம் மாதம் ரூ.500 என பலரிடம் மொத்தமாக ரூ.1200 கோடி வசூல் செய்து வழங்கப்பட்டுள்ளது. பணம் கொடுத்தவர்கள் தீபாவளி, பொங்கல் பரிசுக்காக காத்திருக்க, சம்சுதீன் மொய்தீன் பணத்தை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார்.
இதனால் பணம் கொடுத்தவர்கள் ஏஜெண்டுகளை விரட்ட, அவர்கள் செய்யாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு மொத்தமாக கிளம்பி சென்னையில் உள்ள தலைமை செயலகத்திற்கு வந்த ஏஜெண்டுகள் முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.