மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. 84 பயனாளிகள் பேரில் போலி தங்கக்கடன்.. மகளிர் சுயஉதவிக்குழு பணம் கையாடல்..!
சேத்துப்பட்டு கூட்டுறவு வேளாண் சங்கத்தில் நகை கடன் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு தேவிகாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், 84 பயனாளிகள் பெயரில் நகைக் கடன் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
மகளிர் குழுக்களின் சேமிப்பு பணம் ரூ.27 லட்சம் மாயமாகி இருப்பதாகவும் இந்த வங்கியின் முன்னாள் இயக்குனர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்த விஷயம் தொடர்பாக சங்க செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 24 லட்சம் ரூபாய் தற்போதுவரை மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நகை கடன் மோசடி தொடர்பான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.