மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொங்கல் பரிசு ரூ.1000 விவகாரம்; ஆதார் நம்பரை - வங்கி கணக்குடன் இணைக்க அறிவுறுத்தலா?..!
ரூ.1000 பொங்கல் பரிசு வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆதார் - வங்கிக்கணக்குடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 பணம் வழங்க முன்னேற்பாடுகள் நடந்து வருவதாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஆயத்த பணிகளும் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக ரூ.1000 பணம் வரவு வைக்கப்படவுள்ளதால், அவர்கள் தங்களின் வங்கிக்கணக்கோடு ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பல குடும்ப அட்டைதாரர்கள் தங்களின் வங்கிக்கணக்கோடு ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்பதால், அதனை விரைந்து மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது என் கூறப்படுகிறது. இதனால் பொங்கலுக்கு ரூ.1000 நேரடியாக வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.