652 ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசு காலக்கெடு; அதிரடி உத்தரவு பறந்தது.!
தமிழ்நாட்டில் தனியார் ஆம்னி சொகுசு பேருந்துகள் தலைநகர் சென்னையில் இருந்து பெங்களூர், கொச்சி, எர்ணாகுளம், கன்னியாகுமரி, செங்கோட்டை உட்பட பல்வேறு நகரங்களை இணைகிறது.
இவ்வாறாக இயங்கும் வாகனங்களில், சுமார் 652 வாகனங்கள் தமிழக பதிவெண் அல்லாத தொலைதூர பேருந்துகள் ஆகும். இவை தமிழகத்திற்குள்ளே வெளிமாநில பதிவெண் கொண்டு இயக்கப்படும் நிலையில், அதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.28.16 கோடி இழப்பு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனையடுத்து, மாநில அரசு தற்போது டிசம்பர் 16ம் தேதிக்குள் வெளிமாநில பதிவெண் பேருந்துகளை, தமிழக பதிவெண் கொண்ட பேரூந்துகளாக மாற்ற உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு மேல் வெளிமாநில பதிவெண் கொண்டு தனியார் நெடுந்தூர பேரூந்துகளாக இயக்க அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.