அதிவேகமாக பரவும் பறவைக்காய்ச்சல்; தமிழ்நாட்டில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்.!



TN Health Ministry Advice about Bird Flu

 

இந்தியா தனது கோடை காலத்தின் நிறைவுப்பகுதிக்கு வந்தாலும், சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் காலநிலை மாற்றம் உட்பட பல்வேறு சூழ்நிலையால் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. அனுதினமும் கொளுத்தும் வெயிலின் தாக்கத்தில் சிக்கி பலரும் வெப்ப பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். சில உடல்நலம் குன்றி உயிரிழக்கின்றனர். 

பறவைக்காய்ச்சல் அச்சம்

இதனிடையே, கடும் வெயில் மற்றும் அதனைதொடர்ந்த மழை போன்றவை கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பறவைக்காய்ச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அனைத்து மாநில அரசும் பறவைக்காய்ச்சலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. 

இதையும் படிங்க: 29 வயது கர்ப்பிணிக்கு அரிதிலும் அரிதான நோய்; மருத்துவர்கள் உதவியால் நலமுடன் வீடுவந்த கள்ளக்குறிச்சி பெண்.!

தமிழ்நாட்டில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள கோழிப்பண்ணைகளில், இறைச்சி கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பண்ணைகளில் உள்ள கோழிகளின் நிலையை கண்காணித்து தேவையான நடவடிக்கை எடுக்கவும் மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: தாய்ப்பால் விற்பனையிலும் கலப்படம், போலி.. தமிழ்நாட்டில் கண்காணிப்புகளை தீவிரப்படுத்த உத்தரவு.!