நிக்ஜாங் புயல் கரையை நெருங்கும்போது மக்கள் என்ன செய்ய வேண்டும்?.. அறிவுறுத்தலை வெளியிட்ட தமிழ்நாடு காவல்துறை.!



TN Police Announcement about Peoples Awareness 

 

வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள மிச்சாங் (cyclone michaung) புயலின் காரணமாக, வரும் 3 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை முதலாக கனமழை தொடங்கும். ஆந்திராவில் புயல் கரையை கடக்கிறது.

புயல் 5ம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட பல மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்கவைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், தமிழ்நாடு காவல்துறை மக்களுக்கான அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், "மக்கள் புயலின்போது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். தலைநகர் நோக்கி பயணத்தை மேற்கொள்ள முடிவில் இருக்கும் பிற மாவட்டத்தவர்கள், தங்களின் பயணத்தை முன்-பின் மாற்றி செயல்பட வேண்டும். 

சமூக வலைத்தளங்களில் புயல் குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். தொலைக்காட்சிகளில் அறிவிக்கப்படும் செய்திகளை கண்டு புயலின் நிலையை தெரிந்துகொள்ளவேண்டும். ஏதேனும் அவசரம், உதவி தேவைப்படும் பட்சத்தில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொள்ள வேண்டும். 

புயல் கரையை கடக்கும் அல்லது நெருங்கும் நாட்களில் கடற்கரையோரம் யாரும் செல்லவேண்டாம். ஆறுகள் போன்ற நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம். மக்கள் பெரும்பாலும் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துங்கள். எலக்ட்ரானிக் சாதனங்களை இடி-மின்னலின் போது பயன்படுத்த வேண்டும். 

மின் கம்பிகள் அறுந்து கிடப்பது என எந்த புகாராக இருந்தாலும் காவல்துறைக்கு தெரிவிக்கலாம். அதிகாரிகள் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சம்பந்தப்பட்ட பகுதியில் இருக்கும் மீட்பு குழுவினரை தொடர்புகொண்டு நடவடிக்கை எடுப்பார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.