#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#Breaking: குறையாத கோடை வெப்பம்.. பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்; தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் இறுதி பொதுத்தேர்வுகள் நிறைவுபெற்று, தற்போது கோடை விடுமுறை நிறைவடையும் தருவாய் வந்துவிட்டது.
பள்ளிகள் பொதுவாக ஜூன் மாதம் முதலில் அல்லது 7ம் தேதிக்குள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், நடப்பு ஆண்டில் கோடை வெயிலின் தாக்கம் என்பது ஜூன் மாதத்தின் 5ம் தேதி ஆகியும் கடுமையாக இருக்கிறது.
இதனால் பள்ளிகள் திறப்பு தேதி ஏற்கனவே தள்ளிச்சென்ற நிலையில், வெப்பம் தொடர்ந்து மக்களை வாட்டி வதைப்பதால் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் பள்ளிகள் திறப்பை தள்ளிவைப்பது தொடர்பான அறிவிப்பு உறுதியாகியுள்ளது. அதன்படி, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் 12 என அறிவிக்கப்பட்டுள்ளது.