குஷ்புவிடம் வாய்ப்பு கேட்ட ஹீரோ.. செருப்பால அடிப்பேன் என திட்டிய நடிகை.!
சென்னையில் எப்போதுமே பரபரப்பாக இயங்கக்கூடிய தி.நகரின் தற்போதைய நிலை!
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸ், இந்தியாவிலும் பரவி பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 3 பேர் உயிரிழந்த நிலையில்,இந்தியாவில் இதுவரை ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 169-ஆக உயர்ந்துள்ளது.
பல நாடுகளில் இந்த கொடூர வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தநிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றை மூடுவதற்கு அரசு உத்தரவு பிறப்பித்தது. பெரும்பாலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளை தவிர்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது.
அதேபோல் தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவேண்டாம் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என தெரிவித்தது. இதனையடுத்து சென்னையில் பணிபுரியும் பலர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இதனால் சென்னை கடந்த இரண்டு நாட்களாக வெறிச்சோடி காணப்படுகிறது.
சென்னையில் எப்போதுமே பரபரப்பாக இயங்கக்கூடிய திநகரின் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை ஆகியவற்றில் உள்ள கடைகளை அடைக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. இதனால் திநகரில் உள்ள பெரிய கடைகள் உள்ளிட்ட அனைத்து கட்டிகளும் மூடப்பட்டன. இதனால் ப்போதுமே பரபரப்பாக இயங்கக்கூடிய திநகர் வெறிச்சோடி காணப்படுகிறது.