திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: தங்கத்தின் விலை புதிய உச்சம்: சவரன் 52 ஆயிரத்து கடந்து விற்பனை..!
உலகளவில் நிலவி வரும் பொருளாதார பிரச்சனை காரணமாக இந்தியாவில் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது.
அதேபோல, இந்தியாவில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி, அதிக நுகர்வு போன்றவை அதன் விலையை தொடர்ந்து உச்சத்தில் நகர்த்தி வருகிறது.
சமீபத்தில் ஆபரண தங்கத்தின் விலை ரூபாய் 50,000 கடந்தது. இந்நிலையில், தற்போது 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 560 அளவில் உயர்ந்து 52 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல, கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 6500 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் தற்போது உயர தொடங்கியுள்ள நிலையில், கிலோவுக்கு ரூ. 2000 உயர்ந்து 84 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் வெள்ளியின் விலை ரூ. 84 க்கு விற்பனை செய்யப்படுகிறது.