மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
//Beaking News\\ பள்ளி கல்லூரிகள் விடுமுறை பற்றி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!.
மழையின் காரணமாக நேற்று தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையிலும் ஓரிரு இடங்களில் நள்ளிரவு பரவலாக மழை பெய்தது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, முன்னெச்சரிக்கை ஏற்பாடு சில மாவட்டங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் இதனால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.. இதன் காரணமாக தமிழகம் மற்றும் கேரளாவுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.